Latestமலேசியா

மலேசியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு; வேலையின்மை 3% ஆக நீடிப்பு – மலேசிய புள்ளிவிவரத் துறை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசியாவில் ஜூன் 2026-ல் வேலையின்மை விகிதம் 3.0 விழுக்கடாக நீடித்துள்ளது. அதேவேளை, வேலையில்லாதோரின் எண்ணிக்கை 0.9 விழுக்காடு அதிகரித்து 5,17,800 ஆக உயர்ந்துள்ள நிலையில், மே மாதத்தில் இது 5,13,400 ஆக இருந்தது.

மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்ததன்படி, ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து 1.683 கோடியாக இருந்தது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 70.9 விழுக்காடாக நிலைத்தது.

15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 10.2 விழுக்காடாகவும், 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் விகிதம் 6.3 விழுக்காடாகவும் பதிவானது.

உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுவாக இருப்பதால், தொழிலாளர் சந்தை வரும் மாதங்களிலும் சாதகமாக இருக்கும் என DOSM தெரிவித்துள்ளது.

இருப்பினும், உலகளாவிய மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!