Latestமலேசியா

மலேசிய -தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு தீவிரம் – ஐ.ஜி.பி தகவல்

கோத்தா பாரு, ஏப் 29 – மலேசியதாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என  போலீஸ் படைத்  தலைவர் Tan Sri Razarudin Husain  தெரிவித்திருக்கிறார்.     இன்று அதிகாலையில்   Narathiwat   மாநிலத்தில் , Sungai Golokகில்  Pasemas மாவட்டத்தில்  Gualosira  பகுதியில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாதுகாப்பை தீவிரப்படுத்துவது தொடர்பில்   தாய்லாந்து அதிகாரிகளுடன்  போலீசார் ஒத்துழைப்பார்கள் என்றும்   Razarudin   தெரிவித்தார். 

எல்லைப் பகுதிக்கு அருகே குடியிருக்கும் மக்கள்   மட்டுமின்றி  அங்கு  கடமையில்  இருக்கும்   நமது போலீஸ்காரர்களின்   பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்   என  அவர்  பெர்னாமாவிடம்   கூறினார்.  இந்த சம்பவம் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்கும்படி  Kelantan, Perlis, Kedah  மற்றும் பேரா ஆகிய மாநிலங்களின் போலீஸ் தலைவர்களும்    கேட்டுக்கொள்ளப்பட்டதாக    Razarudin  தெரிவித்தார்.  இதனிடையே  எல்லைப் பகுதிக்கு அருகே  தமது குழுவினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவார்கள் என  பொது நடவடிக்கை  படையின்   தென் கிழக்கு தளபத்திய  தளபதி SAC Sheikh Azhar கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!