Latestமலேசியா

மலேசிய பத்திரிகையாளர் நல்இரவு விழா 2026: RM1.037 மில்லியன் நிதியுதவி பெற்ற MPI

கோலாலாம்பூர், ஜூன்- 25-மலேசியப் பத்திரிகைக் கழகமான MPI, எதிர்வரும் ஜூலை 17-ஆம் தேதி கோலாலம்பூரில் நடத்தவிருக்கும் ‘மலேசிய பத்திரிகையாளர் நல்இரவு 2026’ (MWM 2026) பெருவிழாவுக்காக, பல்வேறு தரப்பிடமிருந்து மொத்தம் 1.037 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றிகரமான நிதித் திரட்டலை ஒட்டி, நிதியுதவி வழங்கிய 60 வணிக நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC), அரசு நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்புப் பாராட்டு விழா இன்று சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.

இதில், மலேசியப் பத்திரிகைத் துறையின் மிக உயரிய விருதான ‘MPI-பெட்ரோனாஸ் மலேசியப் பத்திரிகையாளர் விருது 2025’ (HKM 2025) வெற்றியாளர்களுக்கான பரிசுகளுக்காக, பெட்ரோனாஸ் நிறுவனம் தனது 450,000 ரிங்கிட் முதன்மைத் தொகையை வழங்கி, 1994 முதல் தனது நீண்டகால வியூக ஒத்துழைப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

எஞ்சிய 587,000 ரிங்கிட் நிதி ஏனைய பிற நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்டுள்ளது.

ஊடகத்துறையின் வெற்றியைத் தீர்மானிப்பதில் தனியார் மற்றும் அரசுத் துறைகளின் கூட்டுப் பங்களிப்பு இன்றியமையாதது என MPI-யின் தலைமை செயலதிகாரி Dr Dr. Ainol Amriz Ismailபெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஊடகத் துறையின் உருமாற்றம் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கும் ‘ஊடக பரிணாமமும் தொழில்முறை மாற்றமும்’ என்ற சிறப்பு சிந்தனையாளர் ஆய்வரங்கும் 3-ஆவது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்றது.

Ally Iskandar வழிநடத்திய இக்கருத்தரங்கில், மூத்த பத்திரிகையாளர் டத்தோ ஏ. காடிர் ஜாசின், Firdaus Hussamuddin, Namanzee Harris மற்றும் வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஊடகத் துறையும் தொழில் துறையும் ஒன்றிணைந்து, தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகைத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சவால்களையும் வாய்ப்புகளையும் புரிந்து கொள்வதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஒரு முக்கிய தளமாக இது அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!