Latestமலேசியா

மலேசிய மருத்துவ மன்றத்தின் தலைவர் டாக்டர் ரட்ஷி பதவி விலக வேண்டிய அவசியமில்லை – செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர், ஜூன் 11 -இருதய அறுவை சிகிச்சை சிறப்பு பயிற்சியை முடித்த மருத்துவ நிபுணர்களை பதிவு செய்வதற்கு மறுத்தது தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையினால் மலேசிய மருத்துவ மன்றத்தின் தலைவரான டாக்டர் ரட்ஷி அபு ஹசான் ( Radzi Abu Hassan) பதவி விலக வேண்டிய அவசியம் இல்லையென செனட்டர் டாக்டர் RA லிங்கேஸ்வரன் ( Lingeshwaran ) தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனருமான டாக்டர் ரட்ஷி மருத்துவ மன்றத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என சிலர் கோரிக்கை எழுப்பிவருவதை அவர் சாடினார். மலேசிய மருத்துவ மன்றத்தின் தலைவராக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர்தான் இருக்க வேண்டும் என்ற சட்டவிதி தெளிவாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மலேசிய மருத்துவ மன்றம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் லிங்கேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

ரட்ஷி பதவி விலகினால் மலேசிய மருத்துவ மன்றத்திற்கு யார் தலைமையேற்பார் என்பதையும் டாக்டர் லிக்கேஸவரன் வினவினார். அவரை பதவி விலகக் சொல்வது விவேகமானது அல்ல. மாறாக மலேசிய மருத்துவ மன்றம் சீரமைப்பு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மலேசிய மருத்துவ மன்றத்தின் தலைவர் பதவியிலிருந்து ரட்ஷி பதவி விலக வேண்டுமென DAP யைச் சேர்ந்த டாக்டர் பூ செங் ஹாவ் (Boo Cheng Hau) விடுத்திருந்த கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்தபோது செனட்டர் லிங்கேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!