Latestஇந்தியா

மஹாராஷ்ட்ரா: பிரசவத்தில் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை கையுறைகளை வைத்து தைத்த மருத்துவர்கள்; இளம் தாய் கவலைக்கிடம்

மும்பை, ஆகஸ்ட்-20-இந்தியா, மஹாராஷ்ட்ராவில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தபோது, மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றினுள்ளேயே கையுறைகளையும் துடைப்பான்களையும் வைத்து தைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சந்தியா சூரஜ் என்ற 19 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது.

​4 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையில், அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட _scan_ சோதனையில், அவரது வயிற்றில் வெளிப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

​இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்கள் மறதியாக விட்டுச்சென்ற அறுவை சிகிச்சை கையுறைகளும் காகிதத் துடைப்பான்களும் அகற்றப்பட்டன.

எனினும், ​தற்போது அப்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தவறு உறுதிச் செய்யப்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை உறுதியளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!