Latestமலேசியா

மாதந்தோறும் 150 ரிங்கிட் பயண பாஸ் ரெப்பிட் கே.எல் அறிமுகப்படுத்தியது

கோலாலம்பூர், ஜூன்-22- தனது ரயில் மற்றும் பஸ் சேவைகளில் வரையறையற்ற பயணங்களை வழங்கும் மாதத்திற்கு 150 ரிங்கிட் விலையிலான டிஜிட்டல் பயண
பாஸை ரெப்பிட் கே.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

Touch ‘n Go eWallet விண்ணப்பத்தின் மூலம் தற்போது ரெப்பிட் மாதந்திர பாஸை நேரடியாக வாங்க முடியும் என ரெப்பிட் கே.எல் முகநூலில் பதிவிட்டுள்ளது.

இந்த பாஸ் தொடர்ந்து 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்பதோடு இதனை வெளிநாட்டு பிரஜைகள், சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் கிடைக்கும்.

இந்த டிஜிட்டல் பாஸை வாங்க, பயணிகள் NFC எனப்படும் (Near Field Communication) வசதி கொண்ட ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் பயணிகள் தங்களின் ‘Touch ‘n Go eWallet’ செயலி அண்மையில் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அதேவேளையில் வழக்கமான பாஸ்கள் தொடர்ந்து ‘Rapid KL’ நிலைய முகப்பிடங்களிலும் கிடைக்கும். இந்தப் பாஸ் மூலம் MRT, LRT, Monorail, Sunway BRT, Rapid KL பேருந்து மற்றும் MRT மற்றும் பீடர் பேருந்து (feeder bus) சேவைகளில் வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!