Latestமலேசியா

மில்லியன் கணக்கில் இணைய தாக்குதலிலும் பாடு தரவுத்தள மையம் பாதுகாப்பாக உள்ளது; ரஃபிஸி தகவல்

கோலாலம்பூர், மார்ச் 12 -ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஹேக்கிங் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாடு எனப்படும் மத்திய தரவுத்தள மையம் பாதுகாப்பாக இருப்பதாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி உறுதியளித்திருக்கிறார்.

ஜனவரி 2 ஆம் தேதி பாடு தொடங்கப்பட்டதில் இருந்து, விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு (DDOS) மற்றும் இணைய பாதுகாப்பு தொழிற்நுட்பமான ‘Firewall’லை மீறும் முயற்சிகள் உட்பட பல்வேறு வடிவங்களில் இந்த தாக்குதல்கள் நிகழ்கின்றன என்று அவர் கூறினார்.

அந்த மத்திய தரவுத்தள மையத்தின் மேம்பாட்டு குழுவான ‘System Development Team’ எடுத்த விரைவான நடவடிக்கைகளால் பாடு இன்னும் பாதுகாப்பாக உள்ளது என்று தம்மால்
கூற முடியும் என நாடாளுமன்றத்தில் பொருளாதார அமைச்சுக்கான பேரரசருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்தபோது ரஃபிஸி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!