Latestமலேசியா

மீண்டும் நடக்கத் துடிக்கும் விபத்தால் பாதிக்கப்பட்ட 21 வயது ஷமேதாவுக்கு ஆதரவுக் கரம்: RM3,000 நிதியுதவி வழங்கியது MagnumCares

கோலாலம்பூர், ஜூலை-16-கடந்தாண்டு கோர விபத்தால் இடுப்பு எலும்பு முறிந்து, எழுந்து நடக்கக் கூட முடியாமல் படுக்கையில் முடங்கிக் கிடக்கும் இளம் பெண் ஷமேதாவின் சோகக் கதையயை வணக்கம் மலேசியா உங்களுக்குக் ஏற்கனவே பல முறை கொண்டு வந்துள்ளது.

வலது கால் முட்டி சிதைந்து, இரத்த ஓட்டமும் தடைப்பட்டு நடக்கும் திறனை அவர் இழந்துள்ளார்.
வணக்கம் மலேசியாவிம் அதன் நல்லெண்ண கோல்ப் போட்டியின் மூலம் 1,000 ரிங்கிட் நிதியுதவி முன்னதாக வழங்கியது.

இந்நிலையில், Magnum நிறுவனம் மற்றும் அதன் நற்பணி பிரிவான MagnumCares, ஷமேதாவின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளுக்கு உதவும் வகையில் RM3,000.00 நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று காலை 11.00 மணியளவில் புடுவில் உள்ள Wisma Magnum கட்டடத்தில் நடைபெற்றது.

இந்த நிதியுதவி மகளின் மருத்துவச் செலவுக்கு பெரிதும் உதவும் எனக் கூறிய ஷமேதாவின் தந்தை சரவண தீர்த்தா, Magnum நிறுவனத்திற்கும், வணக்கம் மலேசியாவின் தொடர் ஆதரவுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றித் தெரிவித்தார்.

இவ்வேளையில், சமீதா குறித்து கடந்தாண்டு தெரிய வந்ததிலிருந்து, அவருக்கு உதவ முடிவெடுக்கப்பட்டதாக, Magnum 4D Berhad நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக்ஜம் (ESG) மற்றும் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவின் துணைத் தலைவரான Amelia தெரிவித்தார்.

வாழ்க்கையில் உயர பல்வேறு கனவுகளுடன் இருக்கும் 21 வயது இளம்பெண்ணுக்கு இத்தனைத் துன்பங்கள் வரக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், சமீதாவின் மீட்சி பயணத்தில் Magnum பங்குகொள்ள விரும்பதாகக் கூறினார்.

சமூகத்தில் மருத்துவ நிதியுதவி தேவைப்படும் தனிநபர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும், அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் Magnum Cares தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மீண்டும் எழுந்து நடக்கத் துடிக்கும் ஷமேதாவின் கனவு மெல்ல நிறைவேறுன் என பிராத்திப்போம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!