Latestமலேசியா

மீன்களை ஆற்றில் விடுவதற்கு முன், அனுமதி பெற வேண்டும் ; கூறுகிறது பேராக் மீன்வளத் துறை

ஈப்போ, மே 15 – மீன்களை ஆற்றில் விட விரும்பும் தனிநபர்கள் அல்லது தரப்புகள், முதலில் அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை பெற்றிருக்க வேண்டுமென, பேராக் மாநில மீன் வளத் துறை கூறியுள்ளது.

அது எவ்வகை மீனாக இருந்தாலும் சரி, அதனை ஆற்றில் விட அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆற்று மீன் வகைகளை ஆபத்திலிருந்து பாதுகாக்க, அந்நடவடிக்கை மிகவும் அவசியம் என பேராக் மீன்வள இயக்குனர் முஹமட் கசாலி ஏ மனாப் கூறியுள்ளார்.

உள்நாட்டு மீன்களுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகைகளுக்கும் அது பொருந்தும் என்றாரவர்.

சம்பந்தப்பட்டவர்கள், நேரடியாக மீன்வளத் துறை அலுவலகத்திற்கு சென்று, ஆற்றில் விட விரும்பும் மீனின் வகை, எதனால் அது ஆற்றில் விடப்படுகிறது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

அது உள்நாட்டு மீன் இனங்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதனை யாரும் அலட்சியமாக எண்ண வேண்டாம் எனவும் கசாலி கேட்டுக் கோண்டுள்ளார்.

முன்னதாக, மே 12-ஆம் தேதி, ஆயிரக்கணக்கான மீன்கள், தஞ்சோங் மாலிம், உலு பெர்ணாம் ஆற்றில் விடப்படும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது

அச்சம்பவம் தொடர்பில், பேராக் மாநில மீன்வளத் துறை செய்த புகாரை அடுத்து, மலேசிய மீன்வளத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!