
ஈப்போ, ஜூன்-12-பேராக், ஜெஜாவி பகுதியில் முன்னாள் காதலியின் காதலனை கொலை செய்த குற்றத்திற்காகவும், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் 30 வயது ஆடவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் அளித்த தகவலின்படி, குற்றவாளி நேற்று கங்கார், பெர்லிஸ் சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியும் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், சந்தேக ஆடவன் தனது 25 வயது முன்னாள் காதலியை சந்தித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மறுநாள் அந்தப் பெண்ணை சந்திக்க வந்த அவரது 29 வயது காதலனை கத்தியால் குத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பொறாமை மற்றும் உறவு பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.



