Latestமலேசியா

மெர்லிமாவ் போலீஸ் நிலையம் தொடர்பான AI வீடியோ குறித்து விசாரணை

ஜாசின், ஏப்ரல்-17-மலாக்கா, மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தை தொடர்புபடுத்தி, AI மூலம் உருவாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வைரல் வீடியோ குறித்து மாநிலப் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், கைகள் பின்னால் லிலங்கிடப்பட்ட நிலையில் கைதியாக தோன்றும் ஒரு பெண்ணை, இரண்டு போலீஸ் அதிகாரிகள் மெர்லிமாவ் நிலையத்தின் வெளியே அழைத்துச் செல்லும் காட்சி காணப்படுகிறது.

அந்த வீடியோ உண்மையானது அல்ல, AI தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஜாசின் போலீஸ் தலைவர் Lee Robert தெரிவித்தார்.

இந்த வீடியோ, போலீஸ் படை குறிப்பாக மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தின் பெயருக்கு கேடு விளைவிக்கக்கூடியதாக இருப்பதால், புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும், AI மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!