Latestமலேசியா

மோசடிப் புகாரில் இருந்துத் தப்பிக்க போலீசுக்கே 60K லஞ்சம்; குற்றச்சாட்டை மறுத்த 2 நண்பர்கள்

மலாக்கா, ஏப்ரல் 16 – போலீஸ் நடவடிக்கையில் இருந்துத் தப்பிக்கும் முயற்சியில் 60 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாக வழங்கியக் குற்றச்சாட்டை மலாக்காவில் இரு நண்பர்கள் மறுத்து விசாரணைக் கோரியிருக்கின்றனர்.

மோசடிக்காரர்கள் என சந்தேகிக்கப்படும் அவர்கள் மீது முன்னதாக ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மோசடி புகாரில் இருந்து தப்பிப்பதற்காக மலாக்கா தெங்ஙா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த
Superintendent Supari Muhamad என்பவருக்கு அவ்விருவரும் சேர்ந்து அந்த 60 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகக் கொடுத்திருக்கின்றனர்.

கடந்தாண்டு ஜுன் ஒன்றாம் தேதி பிற்பகல் 1 மணி வாக்கில் அலோர் காஜா, சிம்பாங் அம்பாட்டில் உள்ள 99 Speedmart கடைக்கு முன்புறம் அக்குற்றத்தைப் புரிந்ததாக 26 வயது Teo Teck Qing மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக 19 வயது Keong Kah Wai மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் லஞ்சப் பணத்தில் 5 மடங்குத் தொகை அபராதமாக விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் முறையே 40 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரிங்கிட் தொகையில் ஒரு நபர் உத்தரவாதத்தில் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.

இருவரும் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு, மாதம் ஒருமுறை மலாக்கா MACC அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!