
பாலேக் பூலாவ், ஜூலை-22-பினாங்கு, பாலேக் பூலாவ், Barat Daya மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், தனது மகனின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், போக்குவரத்து போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.20 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் தனது மனைவி, மைத்துனர் மற்றும் வழக்கறிஞருடன் மோட்டார் சைக்கிளை மீட்க வந்துள்ளார்.
விசாரணை அறையில் நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்ட போது, செயல்முறைகளில் திருப்தியடையாத அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 35 வயதுடைய கார்ப்பரல் அந்தஸ்திலான போலீஸ் அதிகாரியை திடீரென தாக்க முயன்றார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், மறுநாள் சனிக்கிழமை கைதுச் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் Dennis Lim Kwang Keng உறுதிப்படுத்தினார்.
வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



