
கேமரன் மாலை, ஜூன்-16 – கேமரன் மலை, Jalan Kea Farm – Berinchang சாலையில் காரோட்டிக்கு வலிப்பு ஏற்பட்டு சாலையோரம் நின்றிருந்த சுற்றுப்பயணிகளை மோதியதில், நால்வர் காயமடைந்தனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில், 22 வயது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடப்புறம் தடம்புரண்டது.
அப்போது சாலையோர கடையிலிருந்தவர்களில் 24 வயது ஆடவர் மற்றும் 2 முதல் 10 வயதிலான 3 சிறார்கள் மீது கார் மோதியது.
அங்கிருந்தவர்கள் காரைத் தள்ளி, அடியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்ட வீடியோ முன்னதாக வைரலானது.
காயமடைந்த நால்வரும் கேமரன் மலை, சுல்தானா ஹஜா கல்சோம் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றனர்.
காரோட்டிக்குக் காயம் ஏற்படவில்லை.
போலீஸ் விசாரணையில் காரோட்டிக்கு வலிப்பு நோய் இருப்பதும் அதற்கு அவர் சிகிச்சைப் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.