Latestமலேசியா

ம.இ.கா தலைமையகத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வருகை; கல்வி, சமூக மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினரும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ம.இ.கா தலைமையகத்தில் வரவேற்றார்.

கல்வி வழி ம.இ.கா மேற்கொண்டுவரும் சமூக உருமாற்ற நடவடிக்கைகளை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சந்திப்பில் முக்கியமாக கேட்டறிந்ததாக அவர் கூறினார்.

அப்போது, அரசியலைத் தாண்டி கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் உலகத் தமிழர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மனப்பூர்வமாக உணர்ந்து அதனை மேம்படுத்த முனைப்புக் காட்டியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை விக்னேஸ்வரன் பாராட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!