
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – ரயில் கேபிள் திருட்டு மற்றும் ரயில் வசதிகளில் அத்துமீறி நுழைவோருக்கு அதிகபட்சம் 100,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
துணைப் போக்குவரத்து அமைச்சர் ஹஸ்பி ஹபிபொல்லா (Hasbi Habibollah), இந்த சட்டத் திருத்தம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுமென தெரிவித்தார்.
கேபிள் திருட்டு சம்பவங்களால் KTMB, பிரசாரனா மலேசியா மற்றும் ECRL திட்டம் ஆகியவற்றில் மொத்தம் 50 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ECRL திட்டத்தில் மட்டும் 71 கேபிள் திருட்டு சம்பவங்கள் பதிவாகி, 4.06 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரயில் பாதுகாப்பை அதிகரிக்க 1,146 CCTV கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், KTMB 24 மணி நேர ரோந்துப் பணியையும் வலுப்படுத்தியுள்ளது.



