Latestமலேசியா

ராசா நாளிதழுடன் பாபாஸ் நிறுவனம் இணைந்து 1,500 இலவச நோன்பு கஞ்சிகள்

ஷா ஆலம், மார்ச் 26 – ரமலான் மாதத்தை முன்னிட்டு ராசா நாளிதழுடன் Nu Ideaktiv Sdn Bhd இணைந்து இலவசமாக 1,500 பேருக்கு நோன்பு கஞ்சிகளை சமைத்து வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

6ஆவது முறையாக AEON பேரங்காடியில் ஏற்பாடு செய்திருந்த RASA Bubur Lambuk Warisan எனும் இந்நிகழ்ச்சியில் ஷா ஆலம் சுற்றுவட்டார மக்களுடன் மருத்துவமனை ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலருக்கும் நோன்பு கஞ்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு வலுவுட்டும் விதமாக இம்முறை பாபாஸ் நிறுவனத்தின் கைவண்ணத்தில்தான் இலவசமாக அந்த நோன்பு கஞ்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பாபாஸ் நிறுவனம், அதன் தயாரிப்பில் வெளியிட்ட கறி மசாலை தூள், பேரீச்சம்பழம், சூப், சீரகம் மற்றும் கருப்பு மிளகு ஆகிய 5 தூள்களை பயன்படுத்தி அந்த கஞ்சிகளை தயாரித்துள்ளது.

கடந்த மார்ச் 16 அன்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பாடகர் Sissy Iman, பிரசித்திபெற்ற சமையல்காரர் Qayyum ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இதுபோன்ற கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களில் சத்தான உணவுகளை சமைத்து கொடுப்பது மட்டுமல்லாது சமூகத்திற்கு சேவை செய்வதில் ஒற்றுமை மற்றும் நன்றி உணர்வை வளர்ப்பதே அடிப்படை நோக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!