Latestமலேசியா

ருக்குன் நெகாரா தொடர்பான சர்ச்சை; “இன்னும் போலீசார் அழைக்கவில்லை” – தோனி புவா

கோலாலம்பூர், மே-21-மன்னராட்சி அமைப்பு மற்றும் தேசிய கோட்பாடான ருக்குன் நெகாரா தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய முகநூல் பதிவைத் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாகியுள்ள முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் தோனி பூவா (Tony Pua), இதுவரை போலீசாரால் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படவில்லை என்றும் அதற்காக அவர் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

DAP நன்னடத்தை குழுத் தலைவருமான Tony Pua மீது, நாட்டின் மன்னராட்சி அமைப்பை பற்றிய அவரது கருத்து தொடர்பாக நாடு முழுவதும் இதுவரை 59 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அண்மையில், மலேசியா Raja Berperlembagaan அதாவது மன்னராட்சி அரசியலமைப்பு முறையை பின்பற்றும் நாடு என்றும் அதில் மன்னரின் அதிகாரம் பொதுவாக குறிப்பிட்ட சில வரம்புகளுக்குள் மட்டுமே செயல்படுகிறது என்றும் Tony Pua தனது Facebook பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃயூட்டின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah) வெளியிட்ட அறிவுறுத்தலுக்குப் பின்னர் வெளியாகியதாக கூறப்படுகிறது.

அந்த அறிவுறுத்தலில், ஸ்ரீ கெம்பங்கான் (Seri Kembangan) சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீ (Wong Siew Ki) மற்றும் முன்னாள் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ (Ronnie Liu) ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை டாத்தாரான் சிலாங்கூரிற்கு (Dataran Selangor)சென்று ருக்குன் நெகாராவின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என சுல்தான் பரிந்துரைத்திருந்தார்.

இதுகுறித்த விசாரணையை சிலாங்கூர் மாநில போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!