Latestஉலகம்

லண்டன் கடற்கரையில் வெறுமனே கூழாங்கற்களையும், சிற்பிகளையும் சேகரித்தால் ; RM5,993 அபராதம்

லண்டன், மே 29 – இங்கிலாந்து, கம்பர்லேண்டிலுள்ள, கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள், கூழாங்கற்களை சேகரில்கும் போது பிடிபட்டால், ஆயிரம் யூரோ அல்லது ஐயாயிரத்து 993 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

கடற்கரையிலிருந்து சிற்பிகளை அகற்றும் பொதுமக்களுக்கும் அதே அபராதம் விதிக்கப்படுமென, கம்பர்லேண்ட் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.

சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலோர சுற்றுசூழல் அமைப்பில், கூழாங்கற்களும், சிற்பிகளும் மிகவும் முக்கியமானவை. அவை இயற்கை அரணாக செயல்படுவதோடு, மண் அரிப்பை தடுக்கவும் உதவுகின்றன. வெள்ளம் ஏற்படாமல் இருக்கவும் அவை துணை புரிகின்றன.

கடற்கரையில் இருந்து ஒரு சில கூழாங்கற்களையும், சிற்பிகளையும் அகற்றுவது பாதிப்பில்லாதது போல தோன்றினாலும், அது உண்மையில் அங்குள்ள சுற்றுசூழல் அமைப்புக்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் என கம்பர்லேண்ட் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!