Latestமலேசியா

லாபு KTM நிலையத்தில் பயணியுடன் மோதல்; ஒப்பந்த நிறுவன ஊழியர் உடனடி பணியிடைநீக்கம்

லாபு, செப்டம்பர்-19-நெகிரி செம்பிலான் லாபு KTM நிலையத்தில் பயணி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் KTMB-யின் நேரடி ஊழியர் அல்ல என்றும், நிலையத்தில் சேவை வழங்க நியமிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர் என்றும் KTMB தெளிவுப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 15-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

Batang Benar மற்றும் Labu இடையே இரயில் ஒன்று காட்டுப்பன்றியை மோதியதைத் தொடர்ந்து, Batu Caves –Pulau Sebang வழித்தட இரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் சுமார் 300 பயணிகள் லாபு நிலையத்தில் இறக்கப்பட்டதுடன், அவர்களது பயணத்தில் 125 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டதாக KTMB தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் நிலையத்தில் பயணி ஒருவருக்கும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில் பயணிகளைக் கையாளும்போது தொழில்முறையற்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என KTMB தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஒப்பந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என KTMB தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!