Latestமலேசியா

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எஸ் .யு .வி தீப்பிடித்தது.

கோலாலம்பூர், ஜன 19 – டுக் ( Duke ) நெடுஞ்சாலையிலிருந்து அம்பாங்கிற்கு செல்லும் சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய SUV வாகனம் தீப்பிடித்தது.

நேற்று மாலை மணி 4.28க்கு நடந்த இந்த விபத்தில் இரண்டு SUV வாகனங்களும் ஒரு Sedan காரும் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறைத் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஸம்சுரி முகமட் இசா ( Mohd Zamzuri Mohd Isa ) தெரிவித்தார்.

சாலையின் நடுப்பகுதியில் 38 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற SUV வாகனம் முன்னே சென்று கொண்டிருந்த Sedan காரை மோதிய வேளையில் அதற்கு முன்னதாக அந்த செடான் கார் வலதுபுறப் பாதையில் இருந்த மற்றொரு SUV வாகனத்தை மோதியது.

இதன் விளையாக SUV வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் கவிழ்ந்து தீப்பிடித்ததாக முகமட் ஸம்சுரி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 69 மற்றும் 21 வயதுடைய இரண்டு ஓட்டுநர்கள் காயத்திற்கு உள்ளாகவில்லை. எனினும் கவிழ்ந்த SUV வாகனத்தின் ஓட்டுநர் நெஞ்சில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிக்சையை மேற்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!