
பேராக், ஜூலை 30 – இன்று காலை பேராக், குவாலா கங்சார் சுங்கை பேராக் அருகேயுள்ள கம்போங் செங்காங் பகுதியில் சாலையில் சாய்ந்து விழுந்திருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 72 வயதுடைய முதியவர் உயிரிழந்தார்.
மேலும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது பள்ளி மாணவர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் (Sabarodzi Nor Ahmad) கூறுகையில், காலை 6.58 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து குவாலா கங்சார் தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணி வேலைகளில் உடனடியாக ஈடுப்பட்டனர்.
மேலும் உயிரிழந்த முதியவரின் உடல் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மீட்புப் பணி காலை 7.46 மணிக்கு நிறைவடைந்தது.



