Latestஉலகம்

விண்வெளியைச் சுற்றிப் பார்க்க lif வசதி: கனவுத் திட்டத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கும் ஜப்பானிய நிறுவனம்

தோக்யோ, ஜூன்-7 – விண்வெளி சுற்றுப் பயணிகள், ஒரே ஒரு பொத்தானை அழுத்தி பூமியில் இருந்து 35,405 கிலோ மீட்டர் உயரம் செல்லும் ‘மின் படிகட்டு’ வசதியைப் பெறவிருக்கின்றனர்.

பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்த ராட்சத lif திட்டத்தை ஜப்பானின் Obayashi கழகம் தயாரித்து வருகிறது.

அனைத்தும் சமூகமாக நடந்தால், 2050-ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகம் வரை அந்த lit வசதி மூலமாக சுற்றுப் பயணிகள் செல்ல முடியும் என, அந்நிறுவனம் அசாத்திய நம்பிக்கைக் கொண்டுள்ளது.

பூமியில் இருந்து செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல ஆறில் இருந்து எட்டு மாதங்கள் வரை பிடித்த காலம் போய், இந்த விண்வெளி மின் படிகட்டு மூலம் மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் வரை மட்டுமே எடுக்கும் வகையில் அப்பயணக் காலத்தைச் சுருக்க முடியும்.

அல்லது ஆக விரைவாக 40 நாட்களில் அப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என மிகுந்த நம்பிக்கையுடன் அது தெரிவிக்கிறது.

எனினும், ஜப்பானிய நிறுவனத்தின் அத்திட்டம் சற்று விநோதமாக இருப்பதோடு, சவால் மிக்கது என்றும், அதை விட ஆபத்து மிக்கது என அறிவியலாளர் ஒருவர் கூறுகிறார்.

விண்வெளியில் அதுவும் நிச்சயமற்ற வானிலையின் போது அவ்வாறு செய்வது சாதாரண விஷயம் அல்ல என்றார் அவர்.

Tokyo 609 போன்ற வானுயரக் கோபுரங்களை நிர்மாணித்த அனுபவத்தைக் கொண்டிருப்பதால் அந்த Obayashi கழகம் இந்த விண்வெளி lif திட்டத்திலும் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருக்கிறது.

பூமிக்கும் விண்வெளிக்குமான இடைவெளியை கேபிள்கள் வாயிலாக குறைக்க முடியும்;

எனவே, இங்கு ரயில் பயணம் செய்வது போல், மக்கள் இனி விண்வெளிக்கும் போய் வர முடியும் என்கிறது Obayashi.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!