Latestமலேசியா

விரைவில் அமைச்சரவை மாற்றமா?

கோலாலம்பூர், டிச 1 – விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படலாம் என அணுக்கமான தகவல்களை மேற்கோள்காட்டி இணையத்தள பதிவேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் ஸாலிஹா முஸ்தபா வெளியேற்றப்படுவதற்கான காரணம் தெரியவில்லையென வெளியிட மறுத்துவிட்ட உயர்மட்ட பி.கே.ஆர் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு தொடர்பில் அமைச்சருக்கும் பிரதமர் அன்வாருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்துவருவதாக மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸாலிஹா நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் நியமிக்கக்படலாம் எனறு கூறப்படுகிறது.

இயற்கை வளங்கள், சுற்றுப்புறம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வி அமைச்சு பொறுப்பு பி.கே.ஆர் வசம் இருப்பதால் அதன் அமைப்பு நிலைக்கு ஏற்ப அப்பதவிக்கு நிக் நஸ்மி நிக் அகமட்  நியமிக்கப்படுவதே பொருத்தமானது என கருதப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் சலாவுடின் அயூப் காலமானது முதல் காலியாக இருந்துவரும் உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் பதவிக்கு புதுமுகமான ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நிதியமைச்சராக இருக்கும் அன்வார் இரண்டு துணையமைச்சர்களை கொண்டிருப்பதால் அதில் மாற்றம் இருக்காது என்றும் அமைச்சரவை மாற்றத்தில் சில துணையமைச்சர்களின் பொறுப்புக்கள் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் இரண்டாவது நிதியமைச்சராக ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் இப்பொறுப்புக்கு வெளியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!