Latestஉலகம்

வெனிசுலா நிலநடுக்கம்: 1400க்கும் மேற்பட்டோர் பலி; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கப் மீட்புப்படையினர் தீவிரம்

கராகாஸ், ஜூன்-29-வெனிசுவலா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ள வேளையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற மீட்புப்படையினர் காலத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இந்த கோர இயற்கை பேரிடரால் ஆயிரக்கணக்கான குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன; பெருமளவிலான மக்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி தங்களின் வீடுகளையும் இழந்துள்ளனர்.

தொடரும் நில அதிர்வுகள் மற்றும் போக்குவரத்து துண்டிப்பு ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், உள்ளூர் அதிகாரிகளும் அனைத்துலக மனிதநேய அமைப்புகளும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெனிசுவலா அதிபர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மேலும், மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் மீட்புக் கருவிகளை வழங்கி உதவுமாறு அனைத்துலகச் சமூகத்திற்கு அவர் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால், பேரிடர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!