
ஷா அலாம் , மே-4-ஷா அலாம் , பெர்சியாரன் மொக்தார் டஹாரியில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், அக்கார்களில் சிக்கிக் கொண்ட இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.
பிற்பகல் 1.36 மணிக்குத் தமது துறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து எட்டுப் பணியாளர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைக் தலைவர் Cik Hamdan Hamzah தெரிவித்தார்.
இந்த விபத்தில் பெரோடுவா கஞ்சில் காரும், பெரோடுவா அக்சியா காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அந்த இரு வாகனங்களின் ஓட்டுநர்களான 39 வயதுடைய ஆடவரும் மற்றும் 21 வயதுடைய இளைஞரும் தங்களது இருக்கையில் சிக்கிக் கொண்டதோடு விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர்.



