Latestமலேசியா

ஷா ஆலாமில், மாற்றி அமைக்கப்பட்ட கொள்கலன் லோரியில், ஒரு மணி நேரமாக டீசல் நிரப்பிய செயல் அம்பலம் ; ஓட்டுனர் கைது

ஷா ஆலாம், மே 31 – சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில், மாற்றி அமைக்கப்பட்ட கொள்கலன் லோரியில், கிட்டதட்ட ஒரு மணி நேரமாக டீசல் நிரப்பிய அதன் ஓட்டுனரின் செயல், அவர் மேற்கொண்ட திருட்டு முயற்சியை அம்பலப்படுத்தியது.

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், தனது கொள்கலன் லோரியில், டீசலை நிரப்ப,12 முறை ஒரே முகப்பில் பணம் செலுத்தியதை தொடர்ந்து அந்நடவடிக்கை அம்பலமானது.

அதனை தொடர்ந்து, நண்பகல் மணி ஒன்று வாக்கில், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட, சிலாங்கூர் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகள், அந்த ஆடவரை கைதுச் செய்தனர்.

உதவித் தொகை வழங்கப்படும் டீசல் மோசடி சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் அவ்வப்போது அதுபோன்ற அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானது என மாநில உள்நாச்சு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சின் அமலாக்க பிரிவு தலைவர் முஹமட் ஷஹ்ரான் நுஹமட் அர்சாட் தெரிவித்தார்.

முன்னதாக, அவ்வாடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன் லோரியின் உடல் அமைப்பு, முறைக்கேடு வாயிலாகவோ, அல்லது அதிகம் லாபத்திற்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிலையங்களில் இருந்து டீசலை நிரப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாக அவர் விளக்கினார்.

விற்பபை ரசீதை சோதனையிட்டதில், ஆயிரக்கணக்கான லிட்டர் டீசலை அவர் நிரப்பி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால், அந்த ஆடவருடன், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்தில் வேலை செய்யும், 30 வயது மதிக்கத்தக்க இரு வங்காளதேச தொழிலாளர்களும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாடரிடமிருந்து, அரசாங்க உதவித் தொகை பெற்ற சுமார் பத்தாயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!