Latestமலேசியா

ஹாடிக்கு எதிரான விசாரணை அறிக்கை நிறைவு ; தேசிய சட்டத் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 8 – பாஸ் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், பிப்ரவரி 20-ஆம் தேதி, “இஸ்லாத்தின் மேன்மை காக்கப்பட வேண்டும்” எனும் தலைப்பில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விசாரணை ஆவணங்கள், தேசிய சட்டத் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணை அறிக்கையை தமது தரப்பு நிறைவுச் செய்துள்ளதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

அவ்விவகாரம் தொடர்பில், புக்கிட் அமானின், குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள்,
கடந்த செவ்வாய்கிழமை, ஹாடியின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ததையும் ரஸாருடின் உறுதிப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து, விசாரணை நிறைவு பெற்று, மேல் நடவடிக்கைகாக விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் கட்டினார்.

1948-ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ், ஹாடிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 29-ஆம் தேதி, மத அறிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை மையமாக வைத்து ஹாடி அவாங் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராப்புடின் இட்ரீஸ் ஷா வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!