
கோலாலம்பூர், ஜூன் 10 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முன்னாள் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி ( Tan Sri Azam Baki) மீது, பதிவு செய்யப்பட்ட குற்றவியல் மிரட்டல் புகார் தொடர்பான விசாரணை ஆவணம், மேல் நடவடிக்கை தேவையில்லை (NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டத்துறைத் தலைவர் அலுவலகமான AGC வெளியிட்ட அறிக்கையில், அசாம் பாக்கிக்கு எதிராக குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட் தேய் (Albert Tei) அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவியல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக AGC கூறியுள்ளது.



