
கோலாலம்பூர், ஜூன் 10 – கிள்ளானிலிருந்து ஷா ஆலம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில், ஓடும் லாரியிலிருந்து கழன்ற சக்கரம் மற்ற வாகனங்கள் மீது மோதாமல் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், ஒரு வாகனத்தின் டாஷ்கேம் காட்சியில் பதிவாகி பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
காணொளியில், ஒரு கனரக லாரி மற்றொரு வேனை முந்திச் செல்லும் போது, அதன் பின்புற சக்கரங்களில் ஒன்று திடீரென கழன்று சாலையில் வேகமாக உருண்டுச் சென்றது.
அந்தச் சக்கரம் வேனை நெருங்கியபோதும் மோதாமல் தப்பியதுடன், தொடர்ந்து நெடுஞ்சாலையில் வேகமாக உருண்டு சென்று, காட்சியைப் பதிவு செய்த வாகனத்தையும் கடந்து சென்றது.
இந்தச் சம்பவம், கனரக வாகனங்களின் பராமரிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும், வாகனத்தின் சக்கர நட்டுகள் சரியாக பொருத்தப்பட்டிருந்தனவா என கேள்வி எழுப்பியுள்ளனர்.



