அம்பாங், டிசம்பர்-7,சிலாங்கூர், அம்பாங், ஜாலான் மேவா 3/5 பாண்டான் மேவா அருகேயுள்ள கால்வாயில், நேற்று காலை 58 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தலையிலும் முகத்திலும் காயங்களுடன் கிடந்த அச்சடலத்தை பொது மக்கள் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
தண்ணீர் நிரம்பியிருந்த கால்வாயில், அச்சடலம் தலைக்குப்புற கிடந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் அசா’ம் இஸ்மாயில் (Mohd Azam Ismail) கூறினார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு, சடலம் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைக்கு திடீர் மரணமாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அசாம் சொன்னார்.