Latestமலேசியா

அரசாங்கம் டிக் டோக்கைக் கட்டுப்படுத்துகிறதா? துணையமைச்சர் திட்டவட்ட மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை-2, வீடியோ ஊடகத் தளமான டிக் டோக்கை (Tik Tok) அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை.

தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ ச்சீங் (Teo Nie Ching) அவ்வாறு கூறியுள்ளார்.

விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களைத் தாங்கி வரும் உள்ளடக்கங்களை நீக்கி, அரசாங்கம் டிக் டோக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்து வருவதாக பரவலாகக் கூறப்படுவதை மறுத்து பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.

டிக் டோக்கில் இருந்து வீடியோக்கள் நீக்கப்படுவதற்கு, தொடர்பு – பல்லூடக ஆணையம் (MCMC) வாயிலாக அரசாங்கம் செய்யும் புகார்கள் மட்டும் காரணமல்ல.

சமூக ஊடகப் பயனாளர்களுக்கும் அதில் பங்குண்டு; நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்கள் குறித்து அவர்கள் புகாரளித்தாலும், டிக் டோக் நடவடிக்கை எடுக்கும்.

எனவே, இவ்விஷயத்தில் அரசாங்கத்தின் மீது மட்டுமே பழிபோடுதல் ஆகாது என்றார் அவர்.

ஜூன் 6 வரைக்குமான தகவலின்படி, டிக் டோக்கில் இருந்து நீக்கப்பட வேண்டிய உள்ளடக்கங்கள் குறித்து அரசாங்கம் செய்த புகார்கள் 1,862 மட்டுமே.

ஆனால், அக்காலக்கட்டத்தில் டிக் டோக் பெற்ற மொத்த புகார்களின் எண்ணிக்கை 6,231.

ஆக, டிக் டோக் உள்ளடக்கங்களை நீக்கும் வேலையில் அரசாங்கமே முழு மூச்சில் இறங்கியிருப்பதாகக் கூறுவதில் நியாயமில்லை என, துணையமைச்சர் மக்களவையில் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!