Latestமலேசியா

அரசாங்க உதவிகளை பெற PADU தளத்தில் சுயவிரங்களை சரிபார்க்க மலேசியர்களுக்கு 3 மாத கால அவகாசம்

புத்ராஜெயா, டிச 30 – அரசாங்க உதவித் திட்டங்களை பெறுவதிலிருந்து பெயர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய பாடு ‘PADU’ எனப்படும் மத்திய தரவு மையத்தில் மலேசியர்கள் தங்களை சுய விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்கிறார் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி .

அதற்கு 3 மாதங்கள் அதாவது மார்ச் 31 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கபடும் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி பாடு ‘PADU’ தரவு தளத்தை அதிகாரப்பூர்வமாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தப் பிறகு மக்கள் தங்களின் சுய விவரங்களை சரிபார்க்க தொடங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுயவிவரங்களை சரிபார்க்காதவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால், அரசாங்க உதவிகளை பெறுவதிலிருந்து அவர்கள் விடுபடும் சாத்தியம் இருக்கிறது. எனவே,  ஒவ்வொருவரும் விவரங்களை சரிபார்ப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் சுய விவரங்களை இங்கே பகிர்வது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், பிற தரப்பு யாரும் இதிலிருந்து தரவுகளைத் திருட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விரைந்து தங்களை சுய விவரங்களை சரிபார்க்க ஊக்குவிக்க, முதலில் வரும் 3000 பேருக்கு இலவச என்.எஃ.சி டச் என் கோ ‘NFC Touch ‘n Go’ அட்டை வழங்கபடும் என்றும் மைடின் பேரங்காடியும் சிறப்பு சலுகைகளை வழங்க முன் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!