Latestமலேசியா

ஆசியாவின் சிறந்த சிகையலங்கார நிபுணர் விருது உட்பட இரு விருதுகளை மலேசியாவின் சிங்காரவேலு வென்றார்

ஆசியாவின் சிறந்த சிகையலங்கார நிபுணர் விருது மற்றும்  ஆசியாவின்  மிகவும் நிலையான  சிகை அலங்கரிப்பு நிலைய விருதை  பினாங்கில் சிகையலங்கார  கடைகளை நடத்திவரும்  எஸ். சிங்காரவேலு வென்று  மலேசியாவுக்கு பெருமை  சேர்த்துள்ளார். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற  ஆசியாவில்  பல்வேறு தொழில்துறைகளில்  சாதனை ஏற்படுத்திய  50 பேருக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றவர்களில்  பினாங்கு  லெபு ஆ  கியூவில் “Verlarz Classic Barber”   சிகையலங்கார கடையை நடத்திவரும்  50 வயதுடைய   சிங்காரவேலுவும் ஒருவராவார்.  ஏற்கனவே  2020/2021  ஆண்டிலும்  ஆசியாவின்  சிறந்த சிகையலங்கார  நிலைய விருதையும் வென்ற அவர், பினாங்கு மருத்துவர் சங்கத்தின்  செயலாளரும் ஆவார்.  5ஆம் வகுப்புவரை மட்டுமே  கல்வி பயின்ற அவர் வாழ்க்கையில் ஏழ்மை நிலையிலிருந்து சிகை அலங்கார தொழிழை கற்றுக்கொண்டு படிப்படிப்பாக முன்னேறி 2003ஆம் ஆண்டு முதல் சிகையலங்காரத் துறையில்  ஈடுபட்டு வருகிறார்.  

சிகையலங்கார  தொழில்துறைக்கு வந்தபின்னர்  அத்துறையில் பல நுணுக்கங்களையும் திறன்களையும் கற்றுக்கொண்டு தொழிலில் தனக்கென நிலையான வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளார்.  சிகையலங்காரத்துறையில் முறையாக பயிற்சி பெற்ற பின்னர்  “Mas Mithra Hair Studio”  என்ற சிகையலங்கார கடையை 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறந்தார்.  2015ஆம் ஆண்டு அவர் “Verlarz Classic Barber” என்ற பெயரில் இரண்டாவது சிகையலங்கார கடையையும் வெற்றிகரமாக திறந்தார்.  அதிலிருந்து கடுமையான உழைப்பு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் நம்பிக்கையும்தான் தமது இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக புக்கிட் மெர்தாஜாம் மண்ணின் மைந்தரான  சிங்காரவேலு தெரிவித்தார். வசதிகுறைந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அவர் இலவசமாகவே சிகையலங்கார பயிற்சியையும்  வழங்கியுள்ளார்.  இதுவரை 25 இளையோர் அவரிடம்  பயிற்சி பெற்றுள்ளனர்.  அவர்களில் பலர் தமது கடையிலும் இதர சில சிகையலங்கார நிலையங்களிலும் வேலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!