Latestமலேசியா

ஆடம்பர பட்டமளிப்பு விழாக்கள் தேவையில்லை; பள்ளிகளுக்கு பாட்லினா வலியுறுத்தல்

காஜாங், பிப்ரவரி 2 – பட்டமளிப்பு விழாக்களை எளிமையாகவும், இரசிக்கும் வகையிலும் நடத்த பள்ளிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

இருப்பினும், அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் மேற்கொள்ளப்படும் பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் பட்டமளிப்பு விழாக்களை ஏற்பாடு செய்யலாம் என கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தெரிவித்தார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் உடனான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது. பள்ளி நிலையிலேயே அந்த விவாதங்கள் முடித்துக் கொள்ளப்பட வேண்டும். ஆட்சேபனைகள் எதுவும் எழுந்தால் அதற்கு விரைந்து தீர்வுக் காணப்பட வேண்டுமெனெவும் பாட்லினா குறிப்பிட்டார்.

தங்கும் விடுதிகளில், ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்படும் மாணவர் பட்டமளிப்பு விழாக்கள் குறித்து பெற்றோர்கள் முன் வைத்துள்ள புகார்கள் குறித்து, பட்லினா அவ்வாறு கருத்துரைத்தார்.

அதுபோன்ற நிகழ்ச்சிகளால் பெற்றோர்கள் சுமையை எதிர்நோக்குவதை தவிர்க்கும் வகையில், பள்ளி அளவில் மாணவர் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான வழிகாட்டியை கடந்த செவ்வாய்கிழமை மலாக்கா மாநில கல்வித் துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!