Latestமலேசியா

இணையப் பகடிவதை; மேலும் கடுமையான தண்டனை விரைவிலேயே அறிவிக்கப்படலாம்

கோலாலம்பூர், ஜூலை-19, இணையப் பகடிவதை குற்றங்களுக்கு மேலும் கடுமையான தண்டனையை அரசாங்கம் விரைவிலேயே அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படுமென உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.

இணையப் பகடிவதையை ஒரு கடுங்குற்றமாக கருதி, அதற்கேற்ற தண்டனையை வழங்க வேண்டும்.

சமூக ஊடக பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் கைதான பெண்ணுக்கு, நீதிமன்றம் வெறும் 100 ரிங்கிட் அபராதம் விதித்தது ஏற்புடையதாக இல்லையென்ற கருத்தை டத்தோ ஸ்ரீ சைஃபுடினும் பகிர்ந்துக் கொண்டார்.

அது போன்ற குற்றங்களுக்கு ‘மென்மையான’ தண்டனை வழங்குவது மக்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தவறான செய்தியை உணர்த்தி விடக் கூடுமென்றார் அவர்.

அதிகரித்து வரும் இணையப் பகடிவதைச் சம்பவங்களை கையாள, புதியச் சட்டமொன்றை இயற்ற வேண்டிய தேவை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக முன்னதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!