புது டெல்லி, ஜூலை 19 – இந்தியாவில், பெண் சமூக ஊடக பிரபலம் ஒருவர், வழுக்கி 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, பிரசித்தி பெற்ற கும்பே (Kumbhe) நீர்வீச்சியில், நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் ரீல்களை பதிவுச் செய்ய சென்ற போது, 27 வயது ஆன்வி கம்தார் (Aanvi Kamdar) எனும் அப்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.
முதலில் ஆன்வியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்பட்டது.
எனினும், பலத்த காயங்களுடன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அவரை, மீட்பு பணியாளர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், ஸ்டெச்சர் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி, மேலே கொண்டு வந்தனர்.
உடனடியாக மாங்கன் தாலுகா அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி ஆன்வி உயிரிழந்தார்.
கணக்காய்வாளரான ஆன்வி, தனது பயண வீடியோக்கள் மூலம், சமூக ஊடக பிரபலமாக வலம் வந்தார். இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று லட்சம் பேர் ஆன்வியை பின்தொடருகின்றனர்.
ஆன்வியின் உயிரை பறித்த கும்பே நீர்வீச்சியில், சமீபத்தில் இளைய தளபதி விஜய் நடித்திருந்த வாரிசு படத்தின் பாடல் காட்சிகள் சில படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.