கொல்கத்தா, ஜூன் 17 – இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், பயணிகள் இரயில் ஒன்று, சரக்கு இரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது ஐவர் உயிரிழந்தனர்.
இரு இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், இரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிக் கிடக்கும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள, பன்சிதேவா பகுதியில் அவ்விபத்து நிகழ்ந்தது.
அவ்விபத்தில் 25 முதல் 30 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனை ஒரு கொடூர விபத்து என கூறியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.