
புது டெல்லி, ஏப்ரல்-23-இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் மலேசியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
அந்நாட்டுக்குள் நுழையும் அனைத்து மலேசியக் குடிமக்களும் இனி e-Arrival Card எனும் மின்னியல் வருகை அட்டையைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையம் இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறை சாதாரண மலேசியக் குடிமக்கள் மட்டுமின்றி, இந்திய வம்சாவளி அட்டையான OCI வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.
பயணிகள் தங்களது பயணத்திற்கு குறைந்தது 72 மணி நேரங்களுக்கு முன்பாக, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான indianvisaonline.gov.in மூலம் இந்த e-Arrival அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த மின்னியல் அட்டையானது, உங்களது விசா மற்றும் கடப்பிதழ் தவிர்த்து கூடுதலாகத் தேவைப்படும் ஆவணமாகும்.
எனவே, இதன் நகலைத் டிஜிட்டல் வடிவிலோ அல்லது அச்சு வடிவிலோ கையில் வைத்திருக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
விமான நிலையத்தில் சிக்கல்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
மேல் தகவல்களுக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தைப் பார்க்கவும்.



