Latestமலேசியா

இந்து அறப்பணி வாரியத்தின் மீது பினாங்கிற்கே முழு அதிகாரம்; அமைச்சு நிதி அறிக்கையை மட்டுமே கண்காணிக்கும் – அமைச்சர்

பினாங்கு, ஜன 7 – இந்து அறப்பணி வாரியத்தின் மீது பினாங்கிற்கே முழு அதிகாரமும் உள்ளது. ஒற்றுமைத் துறை அமைச்சு அந்த அறவாரியத்தை கண்காணித்து ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கையை மட்டுமே அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் சமர்பிக்கும் என அதன் அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கூறியுள்ளார். இதற்கு முன்பதாக, இனி பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒற்றுமைதுறை அமைச்சின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

அதோடு பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ்-வும் இம்மாற்றம் தொடர்பாக தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் மாநில அரசாங்கத்திடம் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் சொல்லியிருந்தை அடுத்து பல சர்ச்சைக்கள் கிளம்பின.

அதன் பின்னர், இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்த அமைச்சர், ஒற்றுமைத்துறை அமைச்சு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை கண்காணித்து ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கையை மட்டுமே அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் சமர்பிக்கும் என கூறியிருந்தார்.

மேலும், பினாங்கு அரசாங்கம் இன்னமும் அதன் நிர்வாக அதிகாரத்தை கொண்டிருப்பதாகவும் உறுதியளித்தார். இதன் வழி இந்த வாரியத்தின் செயல்பாட்டினை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பதாக, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சும் மனிதவள அமைச்சும் அந்த வாரியத்தை கண்காணித்து ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கையை அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் சமர்பித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!