Latestஇந்தியாஉலகம்

‘இன்னொரு சாயா பிளிஸ்’ – டோலி சாய்வாலாவின் தேனிநீரை ருசித்த பில் கேட்ஸ்

புதுடெல்லி, பிப் 29 – தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருவது பில் கேட்ஸ் சாலையோர தேநீர் கடையில் ஒன்றில் ‘இன்னொரு சாயா பிளிஸ்’ என கேட்கும் காணொளி தான்.

அண்மையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது டெல்லியில் ‘டோலி சாய்வாலாவின்’ கைவண்ணத்தில் தயாரான தேநீரை அவர் பருகியுள்ளார்.

‘இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம். அதில் தேநீர் தயாரிப்பும் அடங்கும்’ என கேப்ஷன் கொடுத்து, பில் கேட்ஸ் டோலி சாய்வாலா உடனான வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ஒரு டீ’ என பில் கேட்ஸ் கேட்க, டோலி சாய்வாலா தனது ஸ்டைலில் தேநீர் தயாரித்து கொடுக்க, அதை பில் கேட்ஸ் குடிப்பதுமாக காணொளி அமைந்துள்ளது.

‘டோலி சாய்வாலா’, சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் ஆவர்.

இவர் மிகவும் ஸ்டைலாக தேநீர் தயாரிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

தேநீர் தயாரிப்பு மற்றும் அதை வாடிக்கையாளர்களுக்குப் பகிர்வது வரை அனைத்திலும் தனது ஸ்டைலை பின்பற்றுவார்.

இந்நிலையில் இவர் ஸ்டலாக தேநீர் கலப்பதும், ‘இன்னொரு தேநீர் பிளிஸ்’ என பில் கேட்ஸ் கேட்பதுமான அந்த வீடியோ சுமார் 4 லட்சம் பார்வைகளை நெருங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!