Latestமலேசியா

இறுதிக்கட்ட புதுப்பிப்பில் எல்லைக் கடந்த பயணங்களுக்கான QR குறியீடு

கோலாலம்பூர், ஜூன்-5, நாட்டின் நுழைவாயில்களில் மலேசியர்களை உட்படுத்திய எல்லைக் கடந்த பயணங்களுக்கான பரிசோதனைகளுக்குத் தேவைப்படும் QR குறியீடு செயலி, கடைசிக் கட்ட புதுப்பிப்பில் உள்ளது.

மலேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ அவ்வாறு கூறியிருக்கின்றார்.

அந்த QR குறியீடு, ஜொகூர், Gelang Patah-வில் உள்ள CIQ எனப்படும் சுல்தான் அபு பாக்கார் வளாகத்தில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பரீட்சார்த்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

3 மாத கால அச்சோதனை மலேசியர்களை மட்டுமே உட்படுத்தியுள்ளது.

அச்சோதனை சுமூகமாக மேற்கொள்ளப்பட்டு, பயனீட்டாளர்களிடம் இருந்து ஊக்கமளிக்கும் கருத்துகளும் கிடைக்கப் பெற்றதாக அவர் சொன்னார்.

இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரம் பயனீட்டாளர்கள் அந்த MyTrip on MySejahtera செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அவர்களில் 13,856 பேர் அதனைப் பயன்படுத்தவும் தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த QR குறியீடு பயன்பாட்டை Bangunan Sultan Iskandar CIQ வளாகத்தில் பேருந்துப் பயணிகளுக்கானப் பாதையிலும் தாங்கள் பரிசோதித்து வருவதாக டத்தோ ருஸ்லின் கூறினார்.

மலேசிய-சிங்கப்பூர் நுழைவாயில்களில் மக்களின் பயணத்தை சுமூகமாக்குவதும் சீராக்குவதுமே அந்த QR குறியீடு பயன்பாட்டின் நோக்கம் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!