Latestஉலகம்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல் ஜூலை 9-ல் அடக்கம்

தெஹ்ரான், ஜூன்-14 – ​கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்தொலா அலி கமேனியின் உடல், வரும் ஜூலை 9-ஆம் தேதி அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஏறத்தாழ 37 ஆண்டுகள் ஈரானை வழிநடத்திய அவரது உடல் அடக்க நிகழ்வு, மார்ச் மாதமே நடைபெறவிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வெடித்த போர் காரணமாக தள்ளிப்போனது.

​இந்த இறுதிச் சடங்குகள் ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி 3 நாட்களுக்கு தேசிய அளவில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 7-ஆம் தேதி புனித நகரான கோமிலும் (Qom), இறுதியாக ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரான மஷாத்திலும் (Mashhad) உடல் அடக்க நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு தொடங்கும் ஜூலை 4-ஆம் தேதி, அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்துடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

​இரு நாடுகளுக்கும் இடையே தற்பொழுது அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானின் இந்த அறிவிப்பு அனைத்துலக அளவில் உற்றுநோக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!