Latestஉலகம்

ஈரான் உச்சத் தலைவர் ஆயதொல்லா அலி கமேனியின் உடல் ஈராக் வருகை; புனித நகரங்களில் இறுதி ஊர்வல ஏற்பாடுகள்

தெஹ்ரான், ஜூலை-8 – ஈரானின் உச்சத் தலைவராக இருந்து அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு வான் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஆயதொல்லா அலி கமேனியின் உடல், இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்காக அண்டை நாடான ஈராக்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய மதத் தலைவர்கள் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான ஆன்மீகத் தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், ஈராக்கில் உள்ள நஜாஃப் மற்றும் கர்பலா போன்ற ஷியா பிரிவினரின் புனித நகரங்கள் வழியாக இந்த இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக ஈராக் மற்றும் ஈரானில் இருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனித நகரங்களில் தற்போதே குவியத் தொடங்கியுள்ளனர்.

இந்த அனைத்துலக இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு ஈராக் முழுவதும், குறிப்பாகப் புனிதத் தலங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் உச்சக்கட்டப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!