Latestமலேசியா

கெடாவில் புறாவைப் பிடிக்க முயன்ற 5ஆம் ஆண்டு மாணவர் பள்ளி கட்டடத்திலிருந்து விழுந்து காயம்

பாடாங் தெராப், ஜூலை-8 – கெடா, குவாலா நெராங்கில் உள்ள ஒரு பள்ளியில், புறாவைப் பிடிக்கும் முயற்சியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவன் ஒருவன் பள்ளிக் கட்டடத்தின் மூன்றாவது மாடி மேற்கூரைக்குச் சென்றபோது தவறி விழுந்து காயமடைந்துள்ளான்.

​திங்கட்கிழமை பிற்பகல், அந்த மாணவன் Kafa வகுப்புகளுக்காகப் பள்ளிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புறாவைப் பிடிப்பதற்காக, fire hydrant எனப்படும் தீயணைப்பு நீர்முனை வழியாக கட்டடத்தின் மூன்றாவது மாடி அம்மாணவன் மேற்கூரைக்கு ஏறியுள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக அவன் அங்கிருந்து தவறி விழுந்து இடது கையில் காயமடைந்தான்.

இதையடுத்து அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் அவன் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறான்.

இவ்வேளையில், இது ஒரு விபத்து என்றும், இதில் குற்றச் செயல் அம்சங்கள் எதுவுமில்லை என்றும் மாவட்டப் போலீஸ் உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!