Latestமலேசியா

பெர்லிஸில் அதிரடி: RM34.23 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கலந்த வேப் கலன்கள் பறிமுதல்

கங்கார், ஜூலை-8 – பெர்லிஸில், 34.23 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கலந்த வேப் கலன்களை (cartridge) போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 38 முதல் 68 வயதுடைய மூவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரை பெர்லிஸின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், furanylfentanyl எனும் போதைப்பொருள் கலந்த வேப் திரவங்கள் மற்றும் கலன்கள் கைப்பற்றப்பட்டன.

​மொத்தம் 228.75 லிட்டர் வேப் திரவம் மற்றும் ஆயிரக்கணக்கான கலன்கள் பறிமுதலாகின.

இது சுமார் 457,000 பயனர்களுக்கு போதுமான அளவு போதைப்பொருளாகும் என, மாநில போலீஸ் தலைவர் Muhammad Abdul Halim தெரிவித்தார்.

​கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒரு தாய்லாந்து நாட்டுப் பெண்ணும் அடங்குவார்; மற்ற இருவரும் உள்ளூர்வாசிகள்.

அவர்களில் இருவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

​இந்தக் கும்பலானது, கிடங்குகள் மற்றும் குடியிருப்பு வீடுகளைப் போதைப்பொருள் கடத்தலுக்கான transit மையங்களாகப் பயன்படுத்தி, அங்கிருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

​இந்தச் சம்பவம் குறித்து, அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!