Latestமலேசியா

உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்பதா ? இல்லையா- ? பயிற்சியாளர் முடிவு செய்யட்டும் – பியர்லி -தீனா தகவல்

கோலாலம்பூர், மார்ச் 30 – எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி மே 5ஆம்தேதிவரை சீனாவின் Chengdu நகரில் நடைபெறவிருக்கும் உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவை தேசிய பேட்மிண்டன் குழுவின் பயிற்சியாளர் ரெக்ஸி மைனாக்கியிடமே விட்டுவிடுவதாக பியர்லி – எம். தீனா தெரிவித்தனர்.

தாங்கள் உபர் கிண்ண போட்டியில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மை அல்லது சாதக பாதகங்கள் குறித்து முடிவு செய்யும் பொறுப்பை ரெக்ஸியிடமே விட்டு விடுகிறோம் என மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டைர் ஜோடி தெரிவித்துள்ளனர்.

எந்த முடிவு எடுத்தாலும் எங்களது நன்மையை கருத்திற்கொண்டே இருக்க முடியும் என நாங்கள் கருதுகிறோம் என அவ்விருவரும் தெரிவித்தனர். உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் பக்கேற்காமல் மலேசியாவிலேயே இருந்தால் ஒலிம்பிக் போட்டிக்கு ஆயத்தமாகுவதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

அதே வேளையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு நாங்கள் தகுதி பெற்றிருக்கிறோம் என்பதால் அந்த வாய்ப்பை எப்படி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது என்பதை ரெக்ஸி விவேகமான முடிவை எடுப்பார் என பியர்லி – மைனாக்கி தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!