Latestமலேசியா

உயர்மட்ட நபர்களை விசாரிப்பது எளிதான காரியம் அல்ல – டத்தோஸ்ரீ அன்வார்

கிள்ளான், ஜன 21 – உயர்மட்ட நபர்களை விசாரிப்பது கடினமான பணி, ஆனால் அது செய்யப்பட வேண்டிய ஒன்று என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் கண்டிக்கப்படுவது “விசித்திரமானது” என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஆனால் நாங்கள் எங்கள் கௌரவத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதால் நாங்கள் அவர்களைப் பின்தொடர்வோம், என்று நேற்றிரவு கிள்ளானில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.  எனினும் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி, முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனை ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறி விசாரணை நடத்தி வருகிறது. அவர் குற்றச்சாட்டை மறுத்ததோடு விசாரணையை அரசியல் “சூனிய வேட்டை” என்று முத்திரை குத்தியுள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ் மற்றும் பனாமா பேப்பர்ஸ் அறிக்கைகளில் பட்டியலிடப்பட்டுள்ள மலேசியர்களுக்கு சொந்தமான நிதி ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை ஆய்வு செய்யும் போது, ​​முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் மகனான தொழிலதிபர் மிர்சான் மகாதீரையும் ஊழல் தடுப்பு நிறுவனம் விசாரணைக்கு அழைத்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!