Latestமலேசியா

உலகின் சிறந்த காப்பிகள் வரிசையில் Cappuccino-வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்த தமிழகத்தின் Filter Coffee

தமிழ் நாடு, மார்ச் 11 – நறுமணம் மற்றும் தனிச்சுவைக்கு பெயர் பெற்ற தென் இந்தியாவின் ‘Filter Coffee’ ‘உலகின் சிறந்த 38 காப்பிகள்’ பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரபல உணவு மற்றும் பயண வழிகாட்டித் தளமான TasteAtlas இந்த காப்பி தர வரிசையை வெளியிட்டுள்ளது.

அதில் கியூபா நாட்டின் Cuban Espresso காப்பி முதலிடத்தில் இருக்கிறது.

தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஃபில்டர் காப்பி, Cappuccino-வையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது இந்தியாவின் காய்ச்சப்பட்ட காப்பி பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

தமிழகத்தில் பலரும் காலை மாலை நேரங்களில் சுடச் சுட பருகும் இந்த ஃபில்டர் காப்பி, மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கப்படுவதாகும்.

பலர் இரவில் ஃபில்டரில் காப்பி தூளைப் போட்டு விட்டு, மறுநாள் காலையில் அதில் புதிதாகக் காய்ச்சப்பட்ட சூடான பால் மற்றும் சீனியுடன் கலந்து குடிப்பார்கள்.

ஃபில்டர் காப்பி பெரும்பாலும் பித்தளையால் ஆன ஒரு சிறிய டம்ளரில் வைத்து சூடான நுரைத்த பாலுடன் பரிமாறப்படுகிறது.

அதனுடன் ‘டபரா’ என்ற சிறிய கிண்ணம் போன்ற தட்டும் இருப்பதை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம்.

இவ்வேளையில், அப்பட்டியலில் மூன்றாவது இடம் கிரீஸ் நாட்டின் Espresso Freddo காப்பிக்கு கிடைத்திருக்கிறது.

இத்தாலியின் Cappuccino காப்பிக்கு ஐந்தாவது இடமே கிட்டியுள்ளது.

மற்றோர் ஆசிய நாடான வியட்நாமின் Iced Coffee பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!