
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-1-உலு சிலாங்கூரில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர் அறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை சுமார் 7.15 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆசிரியை, ஆசிரியர் அறையில் மயங்கிக் கிடந்தது குறித்துப் போலீஸுக்கு அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றது.
உடனடியாக அவர் சிகிச்சைக்காகக் குவாலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவர்கள் உலு சிலாங்கூர் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தையோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு உலு சிலாங்கூர் மாவட்டப் போலீஸ் தலைவர் எம். மணிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.



